அலிபாபாவை தொடர்ந்து Ant குழுமத்தையும் இழக்கும் Jack Ma; தொடரும் சீனாவின் அடக்குமுறை!
Jack Ma: ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக இருந்த சீனாவின் கோடீஸ்வர தொழிலதிபர் ஜாக் மா சீன அரசை விமரித்த காலத்திலிருந்து கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்.
Jack Ma: ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஜாக் மாவுவின் நெருக்கடிகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. நீண்ட நாட்களாக அவர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் ஜப்பானில் வசிப்பதாக செய்தி வந்தது. தற்போது ஜாக் மாவுக்கு மிகப்பெரிய அடியாக மற்றொரு ஒரு செய்தி வந்துள்ளது. ஆண்ட் குழும நிறுவனர் ஜாக் மா தனது சொந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இப்போது ஆண்ட் குழுமத்தில் அவரது பங்கு 10 சதவீதமாக குறைந்துள்ளதோடு, அதன் கட்டுப்பாட்டு உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
ஆண்ட் குழுவின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி
இன்று காலை ஆன்ட் குழுமத்தின் அறிக்கையில், சீனாவின் கோடீஸ்வரரும், மாபெரும் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மா, தனது வாக்குரிமையை இழக்கிறார். கோடீஸ்வரரான ஜாக் மா நிறுவனத்தில் எந்த உரிமையும் வாக்குரிமையும் பெறாத வகையில், ஃபின்டெக் நிறுவனமான தனது பங்குக் கட்டமைப்பை சீர் செய்துள்ளது. குழுமத்தின் பங்குதாரர்கள் அத்தகைய சீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டதாகவும், இதன் மூலம் ஜாக் மாவின் அனைத்து வாக்குரிமைகளும் முடிவடைவதாகவும் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆண்ட் குரூப் ஐபிஓவுக்கு மேலும் காத்திருக்கும் நிலை
செய்தி நிறுவனமான AFP வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் ஜாக் மாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்து அவரது கையை விட்டு வெளியேறியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட் குழுமத்தின் (ANT Group) பங்குதாரர் முறை மாற்றமானது, ஏற்கனவே நீண்ட காத்திருப்பில் உள்ள அதன் IPO க்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். 2021 ஆம் ஆண்டில், சீன அரசாங்கம் ஆண்ட் கம்பெனியின் பிளாக்பஸ்டர் $ 37 பில்லியன் ஐபிஓவைத் தடைசெய்தது. மேலும் விதிகளை மீறியதாக, அலிபாபா நிறுவனத்திற்கு 2.8 பில்லியன் டாலர் அபராதம் விதித்தது.
மேலும் படிக்க | சீனாவில் 'புதிய கட்டத்தில் நுழையும்' கோவிட்-19 பற்றி ஜி ஜின்பிங் கமெண்ட்
ஜாக் மாவின் பிரச்சனைகள் ஆரம்பித்தன
இந்த நடவடிக்கை ஆண்ட் குழுமத்தின் பங்குதாரர்களின் பொருளாதார நிலையை பாதிக்காது என்றாலும், இந்த செய்தி ஜாக் மாவுக்கு பின்னடைவை தருகிறது. ஏனெனில் நிறுவனத்தை உருவாக்க மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்ட நிறுவனத்தில் அவரது வாக்குரிமை இப்போது 50 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதம் வந்துள்ளது. ஜாக் மாவின் பிரச்சனைகள் 2020 ஆம் ஆண்டில் அவர் சீன அரசாங்கத்தை விமர்சித்த போது தொடங்கியது. அதன் பிறகு அவரது சொத்து மதிப்பும் குறைந்தது.
சீன அரசாங்கத்தை விமர்சித்த பின்னர் தாக்குதலுக்கு உள்ளான அவரது நிறுவனங்கள்
ஜாக் மா 2020 இல் சீனாவின் அடக்குமுறை கொள்கைகளை விமர்சித்தார். சீனாவின் நிதி ஒழுங்குமுறை நடவடிக்கையை விமர்சித்த அவர், அரசுக்கு சொந்தமான வங்கிகளை கந்து வட்டிக்காரர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்தார். பொதுத்துறை வங்கிகள் அடகுக் கடை மனப்பான்மை கொண்டவை என்று அவர் குற்றம் சாட்டினார். சர்வதேச நிதி ஒழுங்குமுறை ஒப்பந்தம் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். அப்போதிருந்து, அவர் உருவாக்கிய ஆண்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் மீது சீன நிர்வாகம் தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்தன.
மேலும் படிக்க | Watch: காணாமல் போன Jack Ma திரும்பி வந்தார்: Alibaba இணை நிறுவனருக்கு என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ