36 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் விமான நிலையம் (பலாலி) செயல்பாட்டுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1923-ஆம் ஆண்டு இலங்கையில் நடைப்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக பலாலி விமான தளத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து 2009-ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.



இந்நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலாலி விமான நிலையம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்ததாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் புரணமைக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட அதிகாரிகள் சிலர் கலந்துகெண்டிருந்தனர்.


இதனிடையே சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் அலைன்ஸ்ஏர் விமானம் வெற்றிகரமாகத் தரையிறங்கிய. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சிறு குறிப்பு: பிரிட்டிஷ் ஆயுதப்படைகளால் 359 ஏக்கர் நிலத்தில், 1947-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் பாலாலி விமான நிலையம் திறக்கப்பட்டது. முதல் விமான சேவையாக இந்தியாவுக்கு முதல் விமானம் அன்றைய தினம் இயக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி, இது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக செயல்படுகிறது.