Princess vs Volunteer: இளவரசி பட்டமும் காதலுக்கு முன் கால் தூசு: ஜப்பான் மங்கை மாகோ
`காதலுக்கு எல்லையே இல்லை` என்ற பழமொழியை உண்மையாக்கியுள்ளார் ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ
ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் ஊதியம் பெறாத தன்னார்வலராக பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
"காதலுக்கு எல்லையே இல்லை" என்ற பழமொழியை உண்மையாக்கியுள்ளார் ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ. அவர் தற்போது, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் ஊதியம் பெறாத தன்னார்வலராக பணிபுரிவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
30 வயதான முன்னாள் இளவரசி, பட்டங்களை விட்டுவிட்டு, 'சாதாரண' காதலன் கெய் கொமுரோவை திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார்.
ஜப்பான் அரசின் விதிப்படி, அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், சாதாரண குடும்பத்தினரை திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழப்பார். அதற்காக இளவரசி மகோவிற்கு 137 மில்லியன் யென்(இந்திய மதிப்பில் சுமார் 8.76 கோடி) இழப்பீடு கொடுக்கப்படும்.
Mako Komuro தற்போது அருங்காட்சியகத்தின் ஆசிய கலை சேகரிப்பில் பணிபுரிகிறார். ஜப்பான் டைம்ஸ் படி, ஜப்பானுக்கு புத்த மதத்தை அறிமுகப்படுத்திய 13 ஆம் நூற்றாண்டின் துறவியின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட ஓவியங்களின் கண்காட்சியைக் கொண்டு வர முன்னாள் இளவரசி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், படித்த. 2016 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கலை அருங்காட்சியகம் மற்றும் கேலரி ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மேலும் படிக்க | சொத்து தேவையில்லை! காதலன் தான் முக்கியம்! இளவரசியின் அதிரடி முடிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR