சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கடந்த 2019- ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு, முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதால் உலக நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்கிறது. எனினும், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. 


மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி


அந்தவகையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,03,58,815 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 57,45,09,636 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64,70,926 உயிரிழந்து உள்ளனர். அதன்படி உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


இந்த நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.


மேலும் படிக்க | பீதியை கிளப்பும் Omicron BA.4, BA.5; உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை



இதனைத்தொடர்ந்து, ஃபுமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஜப்பான் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமை, நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மொத்தம் 294 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | COVID-19: BA.4, BA.5 வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ