அமெரிக்காவில் தீபாவளி: வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றினார் அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்கா பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடி, உலக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அதிபர் ஜோபைடன் தனது மனைவியுடன் குத்து விளக்கை ஏற்றும் புகைப்படத்தையும் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பதிவில், "இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை ஆகியவற்றை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதை தீபாவளியின் தீபங்கள் நமக்கு நினைவூட்டட்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதே போன்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது டிவிட்டர் பதிவில், ஒரு வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தீபத்திருநாளாம் தீபாவளியை, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்
முன்னதாக, அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்கா பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | COP26 பருவநிலை மாநாட்டில் உரையாற்றிய 15 வயது தமிழக மாணவி வினிஷா உமாசங்கர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR