அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் சவுதி அரேபிய பயணத்தின்போது பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக கேள்வி எழுப்பியது சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபரின் தற்போதைய செளதி அரேபியப் பயணம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தனது ராஜாங்க ரீதியிலான பயணத்தின்போது சந்தித்த ஜோ பிடன்,  2018 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது தொடர்பாக சில கேள்விகளையும் கேட்டுள்ளர். அமெரிக்க அதிபரின் செளதி அரேபிய பயணம் எழுப்பிய பல கேள்விகளுக்கு இந்த செய்தி பதிலாக இருக்கிறது.
 
நேற்று (2022, ஜூலை 15) இளவரசர் முகமதுவைச் சந்தித்த ஜோ பிடன் அதன் பிறகு இது குறித்து பேசியபோது, "கஷோகிக்கு நடந்தது மிகவும் கொடூரமான விஷயம். மீண்டும் இதுபோன்ற மூர்க்கத்தனமான நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால், அதற்கான பதில் உரிய முறையில் கட்டாயம் கொடுக்கப்படும் என்று நான் தெளிவுபடுத்தினேன்" என்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"கஷோகி கொலை தொடர்பான நேரடியான துல்லியமாக நான் விவாதித்தேன். இந்த விவகாரத்தில் எனது பார்வையை தெளிவாகச் சொன்னேன். மனித உரிமைகள் பிரச்சினையில் அமெரிக்க அதிபராக இருக்கும் நான் அமைதியாக இருப்பது பொருத்தமானதாக இருக்காது" என்று ஜோ பிடன் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்


வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கஷோகியின் மரணத்திற்கு வழிவகுத்த நடவடிக்கைக்கு சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மா உத்தரவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.


தனது நேரடியான கேள்விக்கு பட்டத்து இளவரசரின் பதில் என்ன என்பதை குறிப்பிட்ட ஜோ பிடன், "இந்த கொலை விவகாரத்தில் தனது எந்த தொடர்பும் இல்லை என்று இளவரசர் குறிப்பிட்டார். அதேபோல, கஷோகி கொலைக்கு அவர்தான் காரணம் என்று நான் நினைத்தேன் என்பதை தெளிவாக நான் சொல்லிவிட்டேன்" என்று தெரிவித்தார். 


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கஷோகியின் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சவுதி அரேபியாவுக்கு தக்க பாடம் புகட்டுவதாகவும், அந்நாட்டை விலக்கி வைப்பதாகவும் ஜோ பிடன் கடுமையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது எண்ணெய், மனித உரிமைகள், ஈரான் மற்றும் இஸ்ரேல் என பல விஷயங்களை கருத்தில் கொண்டு செளதி அரேப்பியாவிற்கு சென்றுள்ளார்.  


மேலும் படிக்க | உக்ரைன் அணு ஆயுதத்தை உருவாக்குவதே தீர்வா


சவுதி அரேபிய அரச தொலைக்காட்சியான அல்-எக்பரியாவில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை இளவரசர் முகமது வரவேற்று அழைத்துச் செல்வது ஒளிபரப்பப்பட்டது. அமெரிக்க அதிபரை, இளவரசர் அல்-சலாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றர்.


சர்வதேச அளவில் ஆவலை ஏற்படுத்திய இந்த சந்திப்பின் போது, ​​பிடனும், இளவரசரும், ஆற்றல் தொடர்பான விஷயங்களை விவாதித்தனர். எதிர்வரும் வாரங்களில் எரிசக்தி தொடர்பாக சவுதி அரேபியாயில் இருந்து மேலும் பல முன்னேற்ற படிகளை எதிர்பார்க்கிறேன் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.


ஜோ பிடன் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் இடையிலான சந்திப்பு தொடர்பாக கஷோகியின் நெருங்கிய தோழி Hatice Cengiz (கஷோகியை திருமணம் செய்துக் கொள்ள இருந்தவர்) கவலை தெரிவித்துள்ளார்.


கஷோகி, இந்த சந்திப்பு தொடர்பாக ஜோ பிடனிடம் என்ன கேட்பார் என்று கற்பனை செய்து, பிடனிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் "என் கொலைக்கு நீங்கள் உறுதியளித்த பொறுப்பு இதுதானா? முகமது பின் சல்மான் அல் செளத்-ன் அடுத்த இலக்காகும் மனிதரின் இரத்தம் உங்கள் கைகளில் உள்ளது."


மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ