உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில், எந்த நேரமும் போர் மூளலாம் என்பது போன்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், உக்ரைனில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்துள்ளார். படையெடுப்பு நடந்தால், அதற்கான விலையை ரஷ்யா கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக எச்சரித்துள்ளார்.  போர்  நடவடிக்கை பெருமளவிலான மக்களுக்கு துன்பத்தை உண்டாக்கும் என்றும், இதனால் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!


எனினும்,.ஜோ பைடன் மற்றும் புடின் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனால், ரஷ்ய அதிபரின் நிலைப்பாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் தொடர்கிறது எனவும் கூறினார். இந்த மாதம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று  அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. 


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், போர்ச்சுகல், இஸ்ரேல், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளன.


மேலும் ரஷ்யா தாக்குதல் நடத்தினால், ஆப்கானிஸ்தானைப் போன்று எந்த ஒரு மீட்புப் பணியையும் தனது ராணுவம் நடத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் கூறியுள்ளார்.  எனவே, ஏராளமான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் ஏற்கனவே உக்ரைனை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். எனினும், உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, போலந்தில் மேலும் 3000 அமெரிக்க வீரர்களை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 


மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR