காபூலில் குண்டுவெடிப்பு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் இறந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு காபூலில் இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நடந்துள்ளன. முதலில் மும்தாஜ் பள்ளியில் ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயமடைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இரண்டாவது குண்டுவெடிப்பு பின்னர் அதன் அருகே ரஹீம் ஷாஹித் பள்ளியில் நடந்துள்ளது. 


குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கான மக்கள் சிக்கினர்


ஆதாரங்களின்படி, மேற்கு காபூலில் நடந்த குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கான மக்கள் சிக்கினர். இந்த சம்பவத்தில் 6 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


மேலும் படிக்க | Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்‌ஷ பரிந்துரை


ஆப்கானிஸ்தானில் விமானத் தாக்குதல்


முன்னதாக, ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் விமானப்படை சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் விமானப்படையின் கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் வான்வழித் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். தென்கிழக்கு கோஸ்ட் மாகாணத்தின் ஸ்பராய் மாவட்டத்திலும், கிழக்கு குனார் மாகாணத்தின் ஷால்தான் மாவட்டத்திலும் வசிரிஸ்தான் அகதிகள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தினர்.


தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


பாகிஸ்தான் விமானப்படை நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் காபூலுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கானை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையை சுற்றியுள்ள பகுதிகளை ஆப்கானிஸ்தான் பாதுகாக்க வேண்டும் என்றும், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியது.


அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா குவாராஜிமி, ஆப்கானிஸ்தானை எந்த நாடும் சோதிக்கக்கூடாது என்று கூறினார். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நங்கர்ஹரைச் சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாகாணத்தின் கானிகில் மாவட்டத்தில் அதிக அளவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


மேலும் படிக்க | உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யாவின் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதலில் 7 பேர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR