பெண்கள் விமானத்தில் தனியே பறக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் விமானங்களில் தனியே பயணம் செய்ய தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.  

Written by - Chithira Rekha | Last Updated : Mar 28, 2022, 11:05 AM IST
  • ஆப்கனில். பெண்களுக்கு மேலும் கட்டுப்பாடு
  • விமானத்தில் பயணிக்க ஆண் துணை அவசியம்
  • பெண்கள் தனியே பயணிக்கத் தடை
 பெண்கள் விமானத்தில் தனியே பறக்கத் தடை title=

ஆப்கானிஸ்தானில் இருந்த சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டு வரை தாலிபன்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது, விரும்பிய உடையை அணிவது என அனைத்து விவகாரங்களிலும் தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற போது பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் வாய்ப்பளிக்கப்படும் என தாலிபன்கள் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், தாலிபன்கள் ஆட்சிப்பொறுப்பேற்று 7 மாதங்களுக்கு பின்பு, கடந்த 23-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பள்ளிகள் மூடப்பட்டன. அனைத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை விடப்படுவதாக தாலிபன் அரசு அறிவித்துள்ளது. இதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

மேலும் படிக்க | ஆண் வேடம் அணிந்து வெளியே செல்லும் பெண்கள்: ஆப்கானிஸ்தானில் அவல நிலை

இந்த கட்டுப்பாட்டை தொடர்ந்து பெண்களுக்கு புதிய கட்டுப்பாட்டை தாலிபன் அரசு விதித்துள்ளது. அதாவது, பெண்கள் ஆண்களின் துணை இல்லாமல் விமானங்களில் பயணிக்கக் கூடாதென தாலிபன் அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு பயணம், சர்வதேச பயணம் என எந்த பயணத்திற்கும் பெண்களை தனியே அனுமதிக்கக் கூடாதென விமான நிறுவனங்களுக்கு தாலிபன்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் தனியே பயணம் மேற்கொள்ளவிருந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த உத்தரவுக்கு மனித உரிமை அமைப்புகளும், பெண் உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆதரவற்ற பெண்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு பெண்களுக்கும் இந்த உத்தரவு பொருந்துமா என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை.

மேலும் படிக்க |  பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாச்சாரத்தின் அம்சம்: இம்ரான் கான்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News