சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று சீன பிரதமர் லீ கேகுயாங்-கை சந்தித்து பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-


காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் சீன அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த ஆதரவு தொடரும் என எதிர் பார்க்கிறேன். காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சீனா தலையிடுவது சிறந்த சாத்தியமான தீர்வை தரும் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.


சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் போடப்பட்டது.