இளைஞர்களுக்கு தனக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருக்கும். அவர்கள் பெரும்பாலும், ஒல்லியாக, ட்ரிம்மாக, அழகாக, பிட்டாக வேண்டும் என கூறுவதை  பெரும்பாலும் கேட்டிருப்போம். ஆனால், கஜகஸ்தானை சேர்ந்த இந்த அழகான பெண்ணை பாருங்கள். இவருக்கு சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தலையாட்டினால் போதும், யார் வேண்டுமானாலும் அவரை மணக்க தயாராக இருப்பார்கள். தற்போது இந்த அழகி உண்மையான காதலர் துணையை தேடி வருகிறார். ஆனால், பிட்டான துறுதுறுப்பான தோற்றம் கொண்ட ஒரு மனிதனை அவள் விரும்பவில்லை, ஆனால் தொப்பையுடன் பருமனான கணவனை தேடுகிறார். இதை அறிந்த நீங்கள் அதிர்ச்சியடைந்திருக்கலாம், ஆனால் இதுதான் உண்மை. ஆனால், திருமணம் தொடர்பாக அவர் விதித்த நிபந்தனையை நிறைவேற்றுவதும் அத்தனை எளிதல்ல.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பை உள்ள கணவன் ஓகே


இளம் பெண்கள் பொதுவாக பிட் ஆன, ஸ்மார்டான மணமகன் தான் வேண்டும் என்பார்கள், ஆனால், இங்கே ஒரு அழகி தனக்கு தொப்பை உள்ள கணவன் ஓகே வேண்டும் என்கிறார். அதற்கான காரணம் உங்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். உலகில் பிறக்கும் அனைவரும் வித்தியாசமான உடல் வடிவங்களைக் கொண்டுள்ளனர். சிலருக்கு உடல் பருமனாக இருக்கும், சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும். சிலர் குள்ளமாக இருப்பார்கள், சிலர் உயரமாக இருப்பார்கள். சமீபத்தில் கூட கல்யாணம் நடக்கும் சமயத்தில், மணமகன் கருப்பாக இருந்ததால், கலயாணத்தை நிறுத்திய சம்பவங்கலை கேள்விப்பட்டிருக்கிறோம். தோற்றத்திற்காகவும், உருவத்திற்காகவும் நின்ற கலயாணங்கள் பல உண்டு. ஆனால் இங்கே தொப்பை என்றாலும் ஓகே, என்று சொல்வதற்கு பின்னால் பல காரணங்கள் உண்டு. 


மேலும் படிக்க | பசையால் பறிபோன பார்வை... சொட்டு மருத்து போடும் கவனமாக இருங்க மக்களே!


ஆடம்பரமான செலவுகள்


'டெய்லி ஸ்டாரில்' வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கஜகஸ்தானைச் சேர்ந்த மதீனா மம்தாலீவா ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 40 முதல் 50 லட்சம் வரை சம்பாதிப்பதாகத் தெரிகிறது. இப்போது அவரது செலவுகள் மிகவும் ஆடம்பரமானதாகவும் ஹை-ஃபையாகவும் இருக்கும். அதனால்தான் மேடம் இப்போது ஆண்களின் தோற்றத்தில் ஆர்வம் காட்டவில்லையாம். அவளுக்குத் தேவை அவளது ஆடம்பரமான வாழ்க்கைக்கு தாராளமாக உதவக் கூடிய கணவன். கணவன் குண்டாக இருந்தாலும் பரவாயில்லை, சம்பாதிப்பது சட்ட விரோதமாக இருக்கக் கூடாது என்று மதீனாவும் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையின் இந்த கட்டத்தில் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என அவர் விரும்புகிறார். அதனால், தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பணம் கொழுத்த கணவரை தேடுகிறார். தன் ஆடம்பர வாழ்க்கையை தடையின்றி தொடர ஒரு ஏடிஎம் வேண்டும் என்கிறார் எனலாம்.


இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்கவே கூடாது


கணவர் செல்வந்தராக இருக்க வேண்டும், அதே சமயம் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும், ஆனால் அவருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்கவே கூடாது என்ற நிபந்தனையும் மதீனா  போட்டுள்ளார். அதாவது கணவனைப் பற்றிய தகவல்களை யாரும் தெரிந்து கொள்ள கூடாது. அவள் விரும்பும் வரை, கணவரை பற்றிய தகவல்கள் ரகசியமாக இருக்க வேண்டும். இது அவரைத் தவிர உலகில் யாருக்கும் தெரியக்கூடாது. பின்னர் அவள் அதை உணரும்போது, ​​அவளுடைய இந்த துணையைப் பற்றி அவள் எல்லோரிடமும் கூறுவாள். இந்த விஷயத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மதீனா தானே இன்ஸ்டாகிராமில் இருக்கிறார், இந்த தளத்தில் மட்டுமே மில்லியன் கணக்கானவர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள், ஆனால் அவரது கணவர் இந்த தளத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | விவாகரத்தை 'சுதந்திரம்' என கொண்டாடும் மவுரித்தேனியா பெண்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ