தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை அடுத்து வார்னர் நிறுவன தலைவர் கெவின் டுசுஜிஹாரா தனது பொறுப்பில் இருந்து விலகினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் பிரபல பட தயாரிப்பு நிறுவனம் ‘வார்னர் பிரதர்ஸ்’. “சூப்பர் மேன், பேட் மேன், ஹாரிபாட்டர்” உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப் படங்களை இந்நிறுவனம் தயாரித்து இருக்கிறது.


இந்நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் கெவின் டுசுஜிஹாரா. இவர் தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் வாய்ப்பு வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி, இங்கிலாந்தை சேர்ந்த சார்லோட்டே கிரிக் என்ற நடிகையுடன் உறவு வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இந்த புகார் தொடர்பாக ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில் கெவின் திடீரென தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இதனை ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் உறுதி செய்துள்ளது. 


---வழக்கின் பின்னணி---


பிரபல பிரித்தானிய நடிகையான சார்லட் கிர்க், கெவினுக்கு அனுப்பியுள்ள செய்திகளை பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டார், அந்த செய்திகளில் ஒன்றில், 


"நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், அந்த ஹோட்டல் அறையில் நீங்கள் என்னுடன் பாலுறவு கொள்ளும்போது நீங்கள் எனக்கு உதவுவதாக கூறினீர்கள்.


இப்போது நீங்கள் என்னை தவிர்ப்பதைப் பார்த்தால், நீங்கள் என்னை பயன்படுத்திக் கொண்டதுபோல் எனக்கு தோன்றுகிறது. உங்கள் கூற்றுப்படி நீங்கள் எனக்கு உதவுவீர்களா, மாட்டீர்களா?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


எனினும் சார்லட், கெவின் மீது புகார் எதையும் அளிக்கவில்லை. என்றாலும் கெவின் குறித்த குறுஞ்செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதன் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனமே முன்வந்து அவர்மீது விசாரணையை துவக்கியது.