வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்தாலும் அது வித்தியாசமானதாகவும், சர்வதேச அளவில் பேசுபொருளாகவும் மாறுகிறது. அது அணு ஆயுத சோதனை செய்யும் தைரியமாக இருந்தாலும் சரி, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் துணிச்சலாக இருந்தாலும் அவர் செய்திகளில் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது கிம் ஜாங் உன் அனைவரின் கவனத்தை பெற்றிருப்பது பரிசளித்த விஷயம் தொடர்பான விஷயம். 79 வயதான பிரபல வட கொரிய செய்தி தொகுப்பாளருக்கு, நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஆடம்பர வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.  


வட கொரியாவின் மிகவும் பிரபலமான செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவரான ரி சுன் ஹி என்ற பெண்ணுக்கு கிம் ஜாங் உன் இந்த பரிசை வழங்கியுள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியின் குரலாக தொடர்ந்து பணியாற்றுமாறு ரி சுன் ஹி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்று ஒரு AP அறிக்கை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம்! வடகொரியா குற்றச்சாட்டு


79 வயதான அரசு ஊடகத் தொகுப்பாளர் அழகாக உடையுடுத்துவதற்காக பிரபலமானவர். அவரது பாரம்பரிய உடைகளின் தேர்வு மற்றும் ரசனையின் காரணமாக 'பிங்க் லேடி' என்று அழைக்கப்படுகிறார் ரி சுன் ஹி என்பது குறிப்பிடத்தக்கது.


பியாங்யாங்கில் ஆற்றங்கரையில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை புதன்கிழமையன்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒப்படைத்தார். நாட்டிற்கு சிறப்பான சேவை செய்யும் ரி மற்றும் பிறருக்கு வீடுகள் வழங்கப்பட்டன என்று வட கொரிய செய்தி ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.


"சிறுவயதில் இருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் புரட்சிகர அறிவிப்பாளராகப் பணியாற்றிய ரி சுன் ஹி  மற்றும் நாட்டிற்கு சேவையாற்றியவர்களுக்கு மரியாதை வழங்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்படுவதாக அதிபர் கிம் தெரிவித்தார்" என்று வடகொரிய அதிகாரி ஒருவர் கூறியதாக மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


"கட்சியின் செய்தித் தொடர்பாளர், நல்ல ஆரோக்கியத்துடன் தனது பணியை எப்போதும் தீவிரமாகத் தொடர்வார் என்ற எதிர்பார்ப்பை" கிம் வெளிப்படுத்தினார்.


ரி தனது புதிய வீடு ஒரு ஹோட்டல் போன்றது என்று கூறினார்.தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் "கட்சியின் இந்த பரிசு வழங்கிய அன்புக்காக ஆழ்ந்த நன்றியுடன் இருப்பதாகவும், கட்சியின் அன்பு ஏற்படுத்திய நெகிழ்ச்சியால் கண்ணீர் பொங்க இரவு தூக்கமே வரவில்லை " என்று ரி தெரிவித்ததாக  KCNA செய்தி வெளியிட்டுள்ளது. 


 


மேலும் படிக்க | அதிக பணி நேரம், 6 நாட்கள் வேலை: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷரீபின் அதிரடி முடிவுகள் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR