வட கொரியாவா வினோத கொரியாவா: Kim Jong Un ஆட்சியின் latest order என்ன தெரியுமா?

வட கொரியாவின் தலைவரான Kim Jong-Un விடுக்கும் கட்டளைகளும், இயற்றும் சட்டங்களும் வினோதமாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 21, 2020, 08:06 PM IST
  • மற்றொரு ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கையில், வட கொரிய நாடு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
  • குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 90 நிமிடங்களாவது கிம் ஜாங்-உனைப் பற்றி படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
  • புதிய கட்டளை Kim Jong-Un-னின் சகோதரியான Kim Yo Jung-இடமிருந்து வந்துள்ளது.
வட கொரியாவா வினோத கொரியாவா: Kim Jong Un ஆட்சியின் latest order என்ன தெரியுமா?

வட கொரியா ஒரு மர்மமான நாடு. அங்கு நடக்கும் பல விஷயங்கள் பலரது புத்திக்கு புலப்படாத வகையில் தான் உள்ளன. நாட்டின் தலைவரான Kim Jong-Un விடுக்கும் கட்டளைகளும், இயற்றும் சட்டங்களும் வினோதமாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.

இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு அரசாங்கம் விரும்பும் படிப்பினைகளை பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கையில், வட கொரிய (North Korea) நாடு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. இதன் படி, குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 90 நிமிடங்களாவது தங்கள் நாட்டின் உச்ச தலைவரான கிம் ஜாங்-உனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இது வட கொரியாவின் புதிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ALSO READ: வட கொரிய அதிபர் Kim Jong Un சகோதரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பதன் மர்மம் என்ன….!!!!

முன்னதாக, சிறு குழந்தைகள், Kim Jong-Un பற்றிய 30 நிமிட வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அவர்கள் Kim Il-Sung மற்றும் Kim Jong-il ஆகியோரின் குழந்தைப் பருவங்களைப் பற்றிய ஒரு மணிநேர வகுப்பில் கலந்துகொள்ள வெண்டியிருக்கும். மேலும் அவர்கள் 30 நிமிடங்கள் தலைவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து “புரட்சிகர” இசையைக் கற்க வேண்டும்.

அறிக்கையின்படி, புதிய கட்டளை Kim Jong-Un-னின் சகோதரியான Kim Yo Jong-இடமிருந்து வந்துள்ளது. அவர் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பாலர் பள்ளிகளில் “மகத்துவ கல்வி” பாடத்திட்டத்தில் மாற்றங்களை செய்துள்ளார்.

Kim Yo Jong, வட கொரியாவின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த நபராக வளர்ந்து வருகிறார். இப்போது தென் கொரிய உளவுத்துறையின் படி Kim Jong-Un-னின் உண்மையான துணைக் கூட்டாளியாகவும் அவர் உள்ளார்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகத்துவ கல்வி’ குறித்த இந்த புதிய உத்தரவு “வட கொரியாவின் தலைமைக்கு விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சியோலை தளமாகக் கொண்ட டெய்லி என்.கே தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டம் பாலர் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடம் Kim Jong-Un ஐந்து வயதிலேயே மிகவும் புத்திசாலித்தனமான குழந்தையாக இருந்தார். அவர் சிறு வயதிலேயே ஒரு படகு சவாரி செய்தார், இலக்கு பயிற்சி செய்தார், படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்று Kim Jong-Un –னுக்கு புகழாரம் சூட்டுகிறது. 

ALSO READ: வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News