பியோங்யாங்: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதை ஒரு மாறுபட்ட விதத்தில் அவர் செய்துள்ளார். ஆம்!! அவர் வட கொரிய மக்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரது ஆளுமைக்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு செயலாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) இந்த செயலால் பலர், இது வட கொரியாவுக்கு ஒரு அரிய தருணம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். கிம் ஜாங் தனது வாழ்த்து அட்டையில், கடினமான காலங்களில் 'நம்பிக்கை மற்றும் ஆதரவு' அளித்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதே சமயம், புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


'என் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றி'


வழக்கமாக கிம் ஜாங்-உன் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு உரையை வழங்குவார். ஆனால் இந்த ஆண்டு அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என கூறப்பட்டது. கிம் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் மட்டும் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.


கொரிய மத்திய செய்தி நிறுவனத்தின்படி, பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டையில், கிம், "நாட்டை புதிய சகாப்தத்திற்குள் கொண்டுவர நான் கடுமையாக உழைப்பேன். அதில் நமது மக்களின் இலட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறும். கடினமான காலங்களில் கூட எங்கள் கட்சியை நம்பி ஆதரித்த மக்களுக்கு நான் கூறுகிறேன்” என்று எழுதியுள்ளார்.


1995 க்குப் பிறகு இப்போது வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது


வட கொரியா (North Korea) சர்வாதிகாரி கிம் ஜாங் உன், “நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டும் என நான் உண்மையிலேயே விரும்புகிறேன்” என்று மேலும் எழுதியுள்ளார்.


ALSO READ: வட கொரியாவின் Kim Jong Un-க்கு blue jeans மீதுள்ள வெறுப்பின் காரணம் என்ன தெரியுமா?


அனைவருக்கும் இந்த அட்டையை கிம் அனுப்பியுள்ளார் என்று செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், நாட்டில் உள்ள 25 மில்லியன் மக்களுக்கு கிம்மின் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது யதார்த்தத்தில் சாத்தியமில்லை. 1995 க்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவைச் சேர்ந்த ஒரு சர்வாதிகாரி வாழ்த்து வாழ்த்து அட்டைகளை (Greeting Cards) அனுப்பி நாட்டு மக்களை வாழ்த்தியுள்ளார்.


புதிய ஆண்டை மிகுந்த ஆடம்பரத்துடன் வரவேற்றார்


கிம் ஜாங் உன் தனது தந்தையின் சிம்மாசனத்தில் அமர்ந்து 2011 இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்து, அவர் பல இயற்கை பேரழிவுகள், அமெரிக்கா (America) தலைமையிலான நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், அணுசக்தி திட்டத்தின் முட்டுக்கட்டைகள் என பலவித தடைகளை எதிர்கொண்டுள்ளார். அனைத்தையும் அவர் அஞ்சா நெஞ்சத்தோடு சமாளிக்கவும் செய்துள்ளார். கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் கிம் ஜாங் உன் மீதான குற்றச்சாட்டுகளும் பல உள்ளன.


புத்தாண்டு (New Year) தினத்தன்று வட கொரியாவில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பியோங்யாங்கின் பிரதான சதுக்கத்தில், மக்கள் கூட்டமாக நின்று ஆரவாரம் செய்த நிலையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. முகக்கவசங்களை அணிந்து மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதை வட கொரியாவின் தேசிய தொலைக்காட்சி காட்டியது.


ALSO READ: Australia தனது தேசிய கீதத்தில் திருத்தம் செய்துள்ளது: காரணம் இதுதான்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR