ரஷ்யாவை சீண்டும் சீனா, நட்பின் கண்ணை மறைத்த சுயநலம்!!
உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய பிறகு, பல நாடுகளுடனான தன்னுடைய உறவில் சீனா பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியா, மியான்மார், ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யாவும் சேர்ந்துள்ளது.
புதுடெல்லி: உலகளவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் நில மாஃபியாவாக (land mafia) உருவெடுத்துள்ள சீனாவின் (China) நிலப்பசி அடங்கியதாகத் தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனாவை (Corona) பரப்பிய பிறகு, பல நாடுகளுடனான தன்னுடைய உறவில் சீனா பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியா, மியான்மார், ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யாவும் சேர்ந்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றை பரப்பியதற்காக சீனாவை விமர்சித்துக்கொண்டிருந்த வேளையிலும் ரஷ்யா சீனாவுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட தனது நட்பு நாட்டையும் தற்போது சீனா சீண்டத் துவங்கியுள்ளது.
கொரோனாவின் பிடியில் ரஷ்யாவும் சிக்கியிருந்தாலும், அதற்காக ரஷ்யா(Russia) சீனாவை குற்றம் சாட்டவில்லை. ஹாங்காங் விவகாரத்திலும் ரஷ்யா மௌனமாகவே இருந்தது. சீனாவுக்கு எதிராக எதுவும் கூறவில்லை. ஆனால் இதற்கு பதிலாக சீனா ரஷ்யாவுக்கு கொடுத்தது என்ன? ஒரு ரஷ்ய நகரத்தை சீனா தன் பகுதி என அறிவித்துள்ளது!!
ALSO READ: ரஷ்யாவின் Vladivostok நிறுவக கொண்டாட்டத்தால் சீனா எரிச்சல்... காரணம் என்ன...
ஆம்! சீனா, ரஷ்ய நகரமான வ்லாடிவோஸ்தோக்கை (Vladivostok) தன் பகுதி என கூறி வருகிறது. இரண்டாவது ஓபியம் போரில் (Second Opium War) சீனாவை வென்ற பிறகு, ரஷ்யா இந்தப் பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சீனா இப்பகுதியை ரஷ்யாவுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. 1860 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில், ஒரு உடன்பாடும் ஏற்பட்டது. அதன் பிறகிலிருந்து இப்பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆனால் சீனா இந்த உடன்பாட்டை ஏற்க மறுத்துவிட்டது.
அதுமட்டுமல்லாமல், இந்த நகரம் முன்னர் ஹைஷன்வாய் என அழைக்கப்பட்டது என்றும், ரஷ்யா ஒருதலைபட்சமான உடன்பாட்டின் மூலம் இப்பகுதியை சீனாவிடமிருந்து அபகரித்துக்கொண்டது என்றும் சீனா குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து சீனா ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளது. இந்தப் பகுதி கடந்த 160 ஆண்டுகளாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிபைன்ஸ், மலேஷியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடனும் சீனாவின் உறவுகள் சுமுகமாக இல்லை. ரஷ்யாவின் வ்ளாடிவோஸ்டோக் நகரம், பசிபிக் பெருங்கடலில் உள்ள, அதன் கடற்படையின் முக்கிய தளமாகும். இது சீனா மற்றும் வட கொரியாவின் எல்லைகளுக்கு அருகில் உள்ளது. வணிக மற்றும் வரலாற்றுப் பின்னணியில் வ்ளாடிவோஸ்டக் ரஷ்யாவின் மிக முக்கிய நகரமாகும். ரஷ்யா செய்யும் வணிகத்தின் பெரும் பகுதி இந்த துறைமுகம் வழியாகவே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.