நியூடெல்லி: சீனாவில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கோவிட் பரவலானது, முன்னெப்போதையும் விட மிகவும் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீன அரசு வெளியிடும் அதிகாரபூர்வமான தரவுகளுக்கு மாறாக, ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பை, பிரிட்டனைச் சேர்ந்த Airfinity என்ற சுகாதார தரவு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த புதிய கோவிட் அலையினால், சீனாவில் 1.3 முதல் 2.1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்றும் இந்த பகுப்பாய்வு அதிர்ச்சியளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், அந்நாஅட்டு மக்களுக்கு சுகாதார வசதிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷாங்காய் மருத்துவமனைகளில், பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், சுகாதார  ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே, தொடர்ந்து வேலை செய்கிறார்கள். 


மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


வயதானவர்களுக்கு அதிக ஆபத்து
சீனாவில் மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு, இதுவரை முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆபத்து அதிகமாக உள்ளது.  


மருத்துவமனைகளில் கூட்டம்
கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள, சீனாவின் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிட் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் பகுதிகளில் ஜனவரி மாதத்தில் கொரோனாவின் புதிய அலை உச்சம் பெற வாய்ப்புள்ளது.  


பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள்
பிபிஇ எனப்படும் பிரத்யேக பாதுகாப்பு உபகரணம் (PPE (personal protective equipment) ) அணியும் வழக்கம்  சீனாவில் பல மருத்துவமனைகளில் தொடர்ந்தாலும், தொடர்ந்து அங்கு பணி செய்து வரும் மருத்துவமனை ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் பணியை தொடர்கின்றனர்.


மேலும் படிக்க | புதிய வகை கரோனா : மீண்டும் அமலுக்கு வரும் பாதுகாப்பு நடைமுறைகள்... என்னென்ன தெரியுமா?


காய்ச்சல் மருந்து தட்டுப்பாடு
சீனாவில் மருந்துக் கடைகளில் காய்ச்சல் மற்றும் குளிர் மருந்துகள் தட்டுப்பாடும் தொடங்கிவிட்டது. கொரோனா அச்சத்தால், சீனாவில், ஆக்சிஜன் கிட் மற்றும் காய்ச்சல் மருந்துகளை வாங்கிக் குவிக்கின்றனர். எனவே, திடீரென அதிகரித்த காய்ச்சல் மருந்துத் தேவையால் சில்லறை மருந்துக் கடைகளில் காய்ச்சல் மருந்துகள் தீர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.


கோவிட்-19 சோதனைகள்
சீனாவில் கொரோனா வைரஸ் அதிவிரைவில் பரவி வருவதால், கோவிட் பாதிப்புகளைக் கண்காணிக்க சீன அரசாங்கம் போராடுவதாக உலக சுகாதார அமைப்பு WHO மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | புதிய வகை கொரோனா - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ