Latest News Brazil Floods : “வெயில் வந்தால் கூட தாங்கிக்கொள்ளலாம் மழையை தாங்கவே முடியாது” என சிலர் கூறக்கேட்டிருப்போம். சமீப காலங்களாக வரும் பருவ நிலை மாற்றங்களை பார்த்தால் இது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. தமிழகத்தை, மே மாதம் வந்தால் வாட்டி வதைக்கும் வெயிலை விட, டிசம்பர் மாதத்தில் வரும் புயல்-மழையை நினைத்தால்தான் பலருக்கு வயிற்றில் புளியை போட்டு கரைக்கிறது. சென்னையில் வருடா வருடம் ருத்ர தாண்டவம் ஆடும் மழை, இந்த வருடம் பிரேசிலை ஆட்டிப்படைத்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளப்பெருக்கில் 90 பேர் பலி!


பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரியோ கிராண்டே டு சல் என்ற நகரம், தற்போது வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இந்த வெள்ளத்தில் தற்போது சுமார் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகல் தொடர்ந்து நடைப்பெற்று வந்தாலும் நிலைமை கைமீறி போயுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | கடும் வெப்பத்தினால் 100 பேர் மரணம்... பால் விலையை மிஞ்சிய ஐஸ் விலை..!!


கட்டுக்கடங்கா நிலை...


பிரேசிலில், வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மக்கள் ரோடுகளில் தங்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள், பிரேசில் நாட்டின் தலைநகரமான எல்டோராடோ டு சல் எனும் இடத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் பல பேர் தங்கியிருக்கின்றனர். இது குறித்து கூறும் அவர்கள், தாங்கள் அனைவரும் மூன்று நாட்களாக சாப்பிட உணவு இல்லாமல் சிரமப்படுவதாகவும், யாரென்றே தெரியாதவர்களுடன் தங்கியிருப்பதாகவும் தங்களின் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். 


வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்தாலும், கட்டுக்கடங்கா வெள்ள நீரால் அந்த பணிகளும் தற்போது தடைப்பட்டு வருகிறது. 


மக்களை மீட்பதற்காக, மீட்பு படையினர் சிறு சிறு படகுகளில் பிரேசில் நகரின் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தெருக்களில் சுற்றி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் அவர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் பலர், அவரவர்களின் இல்லங்களில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதன் படி, 90 பேர் உயிரிழந்துள்ளதாகவ்ம், 4 பேரின் நிலை குறித்து தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கு உதவி எண்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது வரை, 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு வாசல் இன்றி ரோட்டில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தை கைது..நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ