12வது முறையாக தந்தையான எலான் மஸ்க்! இது போதாதாம்..இன்னும் வேண்டுமாம்..
Latest News Elon Musk Becomes Father : எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், உலகின் பணக்கார தொழிலதிபருமான எலான் மஸ்கிற்கு 12வது குழந்தை பிறந்துள்ளது.
Latest News Elon Musk Becomes Father : டெஸ்லா நிறுவனத்தலைவரான எலான் மஸ்க், உலகின் டாப் 3 பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார். தனது அறிவுக்கூர்மை மூலமாகவும் திறமை மூலமாகவும் பலரை திரும்பி பார்க்க வைத்தவர் இவர். அது மட்டுமல்ல, பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அதன் மூலமாகவும் பலர் கவனத்தையும் ஈர்த்து வந்தார். இவரை பொறுத்தவரை, தான் ஒன்று செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், அதை யார் வந்து தடுத்து நிறுத்தினாலும் செய்து காட்டி விடுவார்.
டெஸ்லா நிறுவனம் மட்டுமன்றி, தி போரிங் கம்பெனி, எக்ஸ் ஏஐ, ஓபன் ஏஐ, நியூரா லிங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர் இவர். முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட சமூக வலைதள நிறுவனத்தை வாங்கிய இவர், சில நாட்களுக்கு முன்பு அதன் பெயரை ஸ்பேஸ் எக்ஸ் என்று மாற்றினார்.
இந்த வருடத்தின் பணக்காரர்களின் பட்டியலில் டாப்பில் இருக்கும் நபரும் இவர்தான். அந்த அளவிற்கு இவரது நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு கோடி கோடியாக வருமானம் கொட்டுகிறது. இவருக்கு இப்படி தொடர்ந்து நிறுவனங்களை வாங்குவதும், அதன் மூலம் தொழில் செய்வது பிடித்திருக்கிறதாே, அதே போல குழந்தை பெற்றுக்கொள்வதும் மிகவும் பிடிக்குமாம். அதன் விளைவுதான் இவருக்கு தற்போது 12 குழந்தைகள் உள்ளன.
12 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க்:
எலான் மஸ்கிற்கு, இதுவரை 2 முறை திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. முதல் மனைவி ஜஸ்டின் மஸ்குடன் 8 வருட திருமண வாழ்வில் இருந்த இவர், அவருடன் சேர்ந்து 5 குழந்தைகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு, தலூகா ரிலே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 முறை திருமணம் நடைப்பெற்று, 2 முறை விவாகரத்தும் நடந்திருக்கிறது.
பின்னர், க்ரிம்ஸ் என்ற இசை கலைஞருடன் சேர்ந்து மூன்று குழந்தைகளுக்கு இவர் தந்தையானதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி இதுவரை, வெளி உலகிற்கு தெரிந்து இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனராம்.
மேலும் படிக்க | எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்
ரகசியமாக குழந்தை பிறந்ததா?
தனது நியூரோலிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷிவோன் சிலிஸ் என்பவருடன் வாழ்ந்து வந்த எலான் மஸ்கிற்கு, ஏற்கனவே 2021ஆம் ஆண்டில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து, இவர்களுக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறந்ததாகவும் அதை வெளி உலகிற்கு தெரியாமல் ரகசியமாக மஸ்க் வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இன்னும் குழந்தைகள்..
எலான் மஸ்க், ஏற்கனவே ஒரு நேர்காணலில் மக்கள் தொகை தட்டுப்பாடு குறித்தும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பேசியிருக்கிறார். இதனால், அதிக IQ இருப்பவர்கள் சேர்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 12 குழந்தைகளுடன் நிற்காமல், இன்னும் அதிக குழந்தைகளை இவர் பெற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது.
எலான் மஸ்க், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் தன்னுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாக முன்னரே குற்றச்சாட்டு எழுந்தது. போகிற போக்கை பார்த்தால், இவர் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் தன்னுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள சொல்வாரோ என்று மக்கள் கவலை கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | எலான் மஸ்க் கனவில் மண்ணள்ளி போடும் அம்பானி - விரைவில் வரும் சாட்டிலைட் இண்டர்நெட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ