பாகிஸ்தானில் பெண்களை கற்பழிப்பவர்களில் பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர்களே!
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுபவர்களில் 82 சதவிதத்தினர் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டவர்களே என்று ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்...
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுபவர்களில் 82 சதவிதத்தினர் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டவர்களே என்று ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். பெண்களின் தந்தை, சகோதரர்கள், தாத்தா, மாமா என குடும்ப உறுப்பினரே பலாத்காரம் செய்வதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே கூறியிருப்பது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷந்தனா குல்சார் கான் (Shandana Gulzar Khan), வார் ஆன் ரேப் (War on Rape) (WAR)) என்ற உரிமைக் குழுவின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டினார். அந்த புள்ளிவிவரங்களின் படி, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதில் குடும்ப உறுப்பினர்களே அதிக அளவில் உள்ளனர்.
Shandana Gulzar Khan ஒரு அரசியல்வாதி, ஆகஸ்ட் 2018 முதல் பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
தொலைகாட்சி விவாத்த்தில் பங்கேற்று பேசியபோது, Shandana Gulzar Khan கூறியவை வேதனையளிப்பதாக இருந்தது. இந்த விஷயம் சிறுமிகளின் தாய்க்கு தெரியவந்தாலும், குடும்பத்தையோ, தங்கள் கணவனை விட்டோ வெளியேற முடியாது என்ற சூழ்நிலையில் போலீசுக்கு செல்வதில்லை” என்று அவலநிலையை தோலுரித்துக் காட்டுகிரார்.
பாகிஸ்தானில் இந்த விவகாரம் குறித்து பேச யாரும் தயாராக இல்லை என்றும், இப்படி வாய் மூடி அமைதியாக இருப்பது ஆபத்தான அறிகுறி என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தானில் ஒரு பெண் தனது வாகனத்தில் எரிபொருள் தீர்ந்த நிலையில், குழந்தைகளுடன் சாலையில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு ஆண்கள் அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் நிறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். குழந்தைகளோ தங்கள் கண் முன்னரே தாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடுமை நேர்ந்த்து. அதன்பிறகும் அந்த கயவர்களின் மனம் திருப்தியடையவில்லை. அநாதரவாக இருந்த அந்த பெண்ணிடம் இருந்த நகைகளையும், பணத்தையும் பிடுங்கிச் சென்றனர்.
இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் சீற்றத்தைத் தூண்டியது. அரசாங்கம் குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
Also Read | World: News Tidbits இன்றைய 10 தலைப்புச் செய்திகள்