பிரான்ஸ் லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி என்பவர். கடந்த 3-ந்தேதி சவுதி அரேபியா சென்றறிருந்த இவர், சவூதி அரேபியாவில் இருந்தபடியே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார். அதனை கேட்டறிந்தத லெபனான் அதிபர் மைக்கேல், ஹரிரி மற்றும் சவுதி இளவரசரிடம் பேசியபிறகு அழைப்பு விடுத்திருப்பதாகவும், அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கச்சி தலைவர்களும் தாயகம் திரும்புமாறு வலியுறுத்தி வந்தது. ஆனால், இதற்கு சவூதி அரேபியா அரசு மறுப்பு தெரிவித்தது. அவர் விரும்பும்பொழுது இங்கிருந்து செல்லலாம் என்றும் கூறியது.  இந்நிலையில், ஹரிரியை பிரான்சுக்கு வரும்படி அழைப்பு விடப்பட்டது.  இதனை தொடர்ந்து சவூதி அரேபியாவில் இருந்து தனது மனைவி லாராவுடன் நேற்றிரவு ஹரிரி கிளம்பினார். அவர் பாரீஸ் நகரில் உள்ள லே போர்கெட் விமான  நிலையத்தில் இன்று வந்து இறங்கினார்.


பாரிசில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள ஹரிரி, அங்கிருந்தவாறு லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்-ஐ தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். வரும் 22-ம் தேதி நடைபெறும் லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நிச்சயமாக நாடு திரும்புவேன் என அவர் அதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.