வாஷிங்டன்: தன்பாலின திருமண அங்கீகாரத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற கவலைகளை போக்கும் விதமாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு கூட்டாட்சி பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது. திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் ஒரே பாலின திருமணங்கள் மற்றும் ஓரின விருப்பம் கொண்டவர்களின் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும். நாட்டின் ஒரு மாகணத்தில் செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களும் அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 47 குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் இந்த மசோதா பெற்றது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அவையில் இருந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கைதட்டி மசோதாவை வரவேற்றனர். 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில், ஜனநாயகக் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர்.  



267 க்கு 157 வாக்குகள் மூலம், திருமணத்திற்கான மரியாதை சட்டம் (The Respect for Marriage Act ) அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் செனட்டில் இந்த மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறினால் தான் மக்களுக்கு மசோதாவினால் பயன் ஏற்படும். அரசியல் காரணங்களுக்காக இரு அவைகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் போவதால், மிகப் பெரிய பிரச்சனைகளும் தீர்வு காண முடியாமல் நிலுவையில் இருக்கும் நிலை ஏற்படும்.


மேலும் படிக்க | இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே


இந்த சட்டம் 1996 ஆம் ஆண்டு திருமண பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்கிறது, இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இணைவே திருமணம் என்று கூறுவது. ஓரினச்சேர்க்கை தம்பதிகள் திருமணம் செய்துக் கொண்டாலும், அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கு இந்த சட்டம் தடையாக இருந்தது, உச்ச நீதிமன்றத்தால் 2013 இல் 5-4 முடிவில் ரத்து செய்யப்பட்ட போதிலும், அந்த சட்டம் நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், மே காலப் கருத்துக் கணிப்பில் 71 சதவீத அமெரிக்கர்கள் ஒரே பாலின திருமணத்தை ஆதரிப்பதாகக் கூறினார்கள். இதனால், அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக, திருமணத்திற்கான மரியாதைச் சட்டத்தை வாக்கெடுப்புக்கு வைத்து வெளிப்ப்டையாக பேச வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. 


இந்த வாரம், மற்றுமொரு முக்கிய விஷயமான, பெண்களின் கருத்தடை அணுகலைப் பாதுகாக்கும் கருத்தடை உரிமைச் சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையில் முன் வைக்கப்படும். 


மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ