பாகிஸ்தான் என்ஜினியர்களுக்கு நிர்வாக மேலாண்மை பயிற்சி அளிக்கும் லஷ்கர்-இ-தொய்பா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய உளவுத்துறை நிறுவனங்களின் ஆதாரங்களின் படி, பாகிஸ்தானில் நாடு முழுவதும் உள்ள என்ஜினியர்களுக்கு பல மேலாண்மை நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த பயிற்சியை முடித்த பின்னர் அவர்களுக்கு  சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையில் ஒரு வேலை கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பயங்கரவாத மற்றும் மும்பை தாக்குதல் தளபதியான அப்துல் ரஹ்மான் மக்கிக்கு இந்த தொட்டத்திற்கான முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது. நிர்வாகத்தின் படிப்பினைகளை வழங்குவதற்கான சரியான தன்மையும், காரணமும் தெரியவில்லை என்றாலும், இந்த என்ஜினியர்கள் சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையில் ஒரு வேலையை பெறவும், பின்னர் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை  இந்தியாவை இலக்காகக் கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கத்திற்கு வழங்கவும்  கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.


அறிக்கையின்படி, 300 பாகிஸ்தானிய என்ஜினியர்கள் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையில் சேர்வதற்காக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த என்ஜினியர்கள் முதலில் லாகூரில் பயிற்சி பெறுவார்கள் பின்னர் அபோட்டாபாத்திற்கு உடல் பயிற்சிக்காக அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!