லிபியா உள்நாட்டு விமானம் ஒன்று 118 பயணிகளுடன் கடத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லிபியாவின் தென்மேற்கு பகுதியான சீபாலில் இருந்து திரிபோலி செல்லும் வழியில் விமானம் கடத்தப்பட்டதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட விமானம் மால்டாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை இரண்டு தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் இந்த விமானத்தை வெடிவைத்து தகர்ப்போம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மால்டா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும் தீவிவாதிகளின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட விமானம் 


ஆப்ரிக்கியா நிறுவனத்திற்கு சொந்தமானது. மால்டாவில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.


 


(With agency inputs)