இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் நடுவானில் மாயம்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!!
இந்தோனேஷியாவில் ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நடுவானில் மாயமானது.
இந்தோனேஷியாவில் ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நடுவானில் மாயமானது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை, பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இன்று காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டதாகவும், மாயமான விமானத்தை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.