உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனா, அதாவது கோவிட் -19 தங்கு தடையின்றி பரவு வருகிறது. பல, உயிர்களையும் குடும்பங்களையும் சீர்குலைத்து, உலகப் பொருளாதாரத்தை மோசமான இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் புதிதாக 90,802 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை திங்களன்று 42 லட்சத்தை தாண்டியது, இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.


உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், 12 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகள் என கூறப்படுகிறது.


பெரும்பாலான நாடுகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், உண்மையில் ஒரு சில அதிர்ஷ்ட நாடுகள் தொற்றுநோயிலிருந்து தப்பியுள்ளன. முக்கியமாக அவற்றின் இருப்பிடம், அளவு மற்றும் மக்கள் தொகை காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.


COVID-19 தொற்று பாதிக்கப்படாத 12 நாடுகள் உள்ளன என அல் ஜசீரா அறிக்கை கூறுகிறது. இந்த நாடுகளில் பல பசிபிக் பெருங்கடலில் சிறிய தீவு நாடுகள், குறைந்த மக்கள் தொகை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மற்றொரு காரணி என்னவென்றால், இந்த நாடுகள் உலக அளவில் கொரோனா பரவல் தொடங்கிய போது,  ஆரம்பத்திலேயே,  பல கட்டுப்பாடுகளை அறிவித்தன, மேலும் நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதன் பெரும்பாலான பகுதிகளிக்கு வருவதற்கு தடை விதிக்கபப்ட்டது.


ஆயினும், கோவிட் -19 பாதிப்பு இல்லை என்ற வட கொரியாவின் கூற்று குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது சீனாவின் நெருங்கிய அண்டை நாடான, வடகொரியா தான், வைரஸ் முதன்முதலில் பதிவாகிய நாடு. இருப்பினும், வட கொரியா தனது எல்லைகளை மூடி, ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தியது.  


மேலும் படிக்க | கொரோனாவை வென்றதா வுஹான்.... உண்மை நிலவரம் என்ன..!!!


வைரஸ் பாதிப்பு இல்லாத 12 நாடுகள் பட்டியல்:


1. வட கொரியா


2. துர்க்மெனிஸ்தான்


3. சாலமன் தீவுகள்


4. வனுவாடு (Vanuatu)


5. சமோவா (Samoa)


6. கிரிபடி (Kiribati)


7. மைக்ரோனேஷியாவின் கூட்டாட்சி நாடுகள் (Federated States of Micronesia)


8. டோங்கா (Tonga)


9. மார்ஷல் தீவுகள்(Marshall Islands)


10. பலாவு (Palau)


11. துவாலு (Tuvalu)


12. நவுரு (Nauru)


ALSO READ | கிட்டதட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து தப்ப சில நேர்மறை சிந்தனைகள்..!!!