லண்டன் தீவிரவாத தாக்குதல்: மக்கள் பீதி அடைத்த வீடியோ காட்சி!
உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது.
இந்நிலையில் லண்டன் தாக்குதலை தொடர்ந்து ஓட்டல் ஒன்றில் மக்கள் பீதியடைந்து இருக்கைகளுக்கு கீழே அமரும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள பப்கள் மற்றும் ஓட்டல்களில் பெரிய திரையில் திரையிடப்பட்ட, சாம்பியன் லீக் கால்பந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது, தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஓட்டல் ஒன்றுக்கு வந்த போலீசார், அங்கிருந்த மக்களை தரையில் அமரக்கூறினர். அங்கிருந்தவர்கள் பீதியடைந்தவாறு மேஜை மற்றும் இருக்கைகளுக்கு கீழ் அமர்ந்தனர். இதனை அங்கிருந்த ஒருவர் மொபைலில் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. தாக்குதலை தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.