பிஜி தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 8.2 ஆக பதிவு!
பிஜி அருகே பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.2 ஆக பத்வாகியுள்ளது!
பிஜி அருகே பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.2 ஆக பத்வாகியுள்ளது!
பசிபிக் கடற்பகுதியில் அமைந்த பிஜி தீவு கூட்டங்களில் ஒன்றான எண்டோய் தீவின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் சுமார் 8.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம், கடலுக்கு அடியில் 560 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தினால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பிஜி தீவு பகுதிகளில் ரிக்டர் மதிப்பில் 4க்கு மேற்பட்ட அளவிலான அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..!