இலங்கையில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைப்பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைப்பெற்ற இச்சந்திப்பில், புதிய பிரதமர் நியமனத்திற்கு காரணமாக அமைந்த முந்தைய அரசாங்க பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் அரசியல் அமைப்பிற்கேற்ப தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு தான் புதிய பிரதமரை தான் நியமித்துள்ளதாகவும், புதிய அரசாங்கம் என்றவகையில் அணிசேரா கொள்கைக்கேற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்துவரும் உறவுகளை பலப்படுத்தி முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இந்த அலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டு தூதுவர்கள், நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப நாட்டினுள் அமைதியை பேணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள், உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்ஹ பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையில் இன்று காலை இலங்கை அரசின் எதிர்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார். இன்று காலை கொழும்பு, விஜேராமையிலுள்ள ராஜபக்‌ஷவின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைப்பெற்றுள்ளது.