மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீது மற்றும் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாலத்தீவில் சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய கோரி உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுதாககக் கூறி, அந்த உத்தரவை செயல்படுத்த அதிபர் மறுத்துவிட்டார். அதனால், உச்ச நீதிமன்றத்துக்கும், மாலத்தீவு அரசுக்கும் இடையேயான மோதல் ஏற்ப்பட்டது.


இந்நிலையில், அந்த உத்தரவை திரும்பப் பெற சொல்லி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு அப்துல்லா யாமீன் 3 கடிதங்களை அனுப்பினார். 


அடுத்த சில மணி நேரத்தில், அவசர நிலைப் பிரகடனச் செய்தியை அதிபரின் உதவியாளர் அஜிமா சுக்குர், அரசு தொலைக்காட்சியில் வாசித்தார். 


இந்த அறிவிப்பை அடுத்து அவர்களைக் கைது செய்யவும் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம், நீதித்துறை நிர்வாக அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.