பொதுவாக ஆண், பெண் என இருபாலரும் தங்களை அழகுபடுத்தி கொள்ள விரும்புவது வழக்கம்.  அதற்கென பலரும் அழகு நிலையங்களுக்கு செல்வது அல்லது வீட்டிலேயே எதாவது செய்து அழகுபடுத்திக்கொள்வது போன்றவற்றை செய்வார்கள்.  ஆனால் ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனிதரை போல தோற்றமளிக்க விரும்பாததால் பல லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றிய சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வட கொரியாவில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் அதிகாரிகள்: காரணம் என்ன?


சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Black Depression' எனும் பக்கத்தில் அந்த 28 வயதான இளைஞர் தனது வினோதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் முகத்தில் jigsaw puzzle போன்ற வடிவத்தில் பல வண்ணங்களில் பச்சை குத்தியுள்ளார், மேலும் காது மற்றும் மூக்குகளில் துவாரங்களிட்டு அணிகலன் அணிந்துள்ளார்.  மேலும் தனது பற்களுகளின் இரு வரிசைகளுக்கும் டைட்டானியத்தால் ஆன மேற்பூச்சை பூசியுள்ளார். 


  



இதைவிட இன்னும் ஒருபடி மேலே சென்று தனது இரு கண்களுக்கும் சாயம் பூசியுள்ளார், கண்களின் வெண்மை பகுதியில் கருப்பு நிற மைக்கொண்டு பச்சை குத்தப்பட்டுள்ளது.  மேலும் இவர் தனது நாக்குகளை இரண்டாக பிளந்து, பாம்பின் பிளவுபட்ட நாக்கு போல செய்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், "உடலில் மாற்றம் செய்வதில் எனக்கு நீண்ட நாட்களாக ஆர்வம் இருந்து வந்தது.  மற்றவர்கள் உடலில் செய்யும் மாற்றத்தை போல் அல்லாமல், நான் உடல் மாற்றத்தில் தனித்துவம் காட்ட விரும்பினேன்.  நான் விரும்பியபடியே என்னால் என் உடலை மாற்ற இயலும், அதற்காக மற்றவர்கள் செய்வது போல நான் செய்ய விரும்பாமல், என்னை பார்த்து மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். 


 



முதன் முதலாக நான் எனது நாக்கை பிளவு படுத்தும் செயல்முறையுடன் மாற்றத்தை தொடங்கினேன், இருப்பினும் இந்த உடல் மாற்றத்தில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை, மேலும் எதிர்காலத்தில் நான் என் உடலில் மாற்றங்களை கொண்டுவர தொடர்ந்து முயற்சிப்பேன்" என்று கூறியுள்ளார்.  இவ்வாறு இந்த வினோதமான தோற்றத்தை பெற இவர் இதுவரை ரூ .12 லட்சம் செலவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | 6 பேரை பலி கொண்ட நீர்வீழ்ச்சி விபத்து வீடியோ! சமூக ஊடகங்களில் வைரல்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR