கென்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து மற்றவர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 


திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள அனைவரும் தனகளது விருப்பத்திற்கு ஏற்றார்போல் திருமணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கென்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து மற்றவர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளார். 


கென்யாவின் கஜியாடோ மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் திருமணம் செய்ய விரும்பிய அவர் இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய ஒப்பு கொண்டனர். அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.




திருமணம் முடிந்த பின்னர் இரண்டு மணப்பெண்களும் ஜாலியாக ஆடி பாடினார்கள். கென்யாவில் பலதார மணம் என்பது சகஜம் தான். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.