அலாஸ்கா: புதன்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலநடுக்கத்தால் (Earthquake) சொத்து அல்லது உயிர் இழப்பு குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.


இரவு 10:15 மணிக்கு, 35 கி.மீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்காவில் (Alaska), தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் (NTWC) தெற்குப் பகுதிகள், தீபகற்பம் மற்றும் ஹின்சின்ப்ரூக் நுழைவு முதல் யுனிமாக் பாஸ் வரையிலான பசிபிக் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கைகளை வெளியிட்டது.  ஹவாய் பகுதிகளுக்கும் "சுனாமி எச்சரிக்கை” வெளியிடப்பட்டுள்ளது.


ALSO READ:Earthquake: நேபாளத்தில் போகாராவின் கிழக்கே 5.3 அளவிலான நிலநடுக்கம் 


பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC), அமெரிக்க மாநிலமான ஹவாய் மற்றும் அமெரிக்க பசிபிக் பிரதேசமான குவாமுக்கு உள்ள சுனாமி அச்சுறுத்தல் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று கூறியது.


ஜப்பானை சுனாமி (Tsunami) தாக்க வாய்ப்பு உள்ளதா என்று ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் ஆராய்ந்து வருவதாக பொது ஒளிபரப்பாளர் என்.எச்.கே தெரிவித்தது.


நியூசிலாந்தில் உள்ள அதிகாரிகள் கடலோரப் பகுதிகளுக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்று மதிப்பீடு செய்வதாகக் கூறினர்.


மற்ற அமெரிக்க மற்றும் கனேடிய பசிபிக் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி அபாயத்தின் அளவை மதிப்பீடு செய்வதாக அமெரிக்க என்.டி.டபிள்யூ.சி தெரிவித்துள்ளது.


அலாஸ்காவில் பெர்ரிவில்லுக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 91 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜிலிருந்து சுமார் 800 கி.மீ (500 மைல்) தொலைவில் இருந்தது. அதைத் தொடர்ந்து ஏழு பின்னடைவுகள் சிறு அதிர்வுகளும் ஏற்பட்டன. அவற்றில் இரண்டின் அளவு 6.0 க்கு மேல் இருந்ததாக USGS தெரிவித்துள்ளது.


ALSO READ:இந்த நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை: அச்சுறுத்தும் சவுதி அரேபியா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR