டோக்கியோ: ஃபுகுசிமா அணு உலையில் இருந்து கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் விடுவிக்கப் போவதாக ஜப்பான் அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.
ஜப்பான் கடல் பகுதியில் 2011 மார்ச் 11ஆம் தேதியன்று ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஃபுகுசிமா அணு உலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் மதிபிட்டிருந்தனர்.
சிதைவடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அசுத்தமான நீரை கடலுக்குள் விடுவிக்கப் போவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா, இது "மிகவும் பொறுப்பற்ற செயல்" என்று சாடுகிறது. அண்டை நாடான தென் கொரியா சியோலில் உள்ள டோக்கியோ தூதரை வரவழைத்து, கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
Also Read | அமெரிக்காவில் மற்றொரு George Floyd சம்பவம்; வீதியில் போராடும் மக்கள்
தீங்கு விளைவிக்கும் ஐசோடோப்புகளை அகற்றவும், உள்கட்டமைப்பை உருவாக்கவும், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெறவும் இந்த ஆலையை இயக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தண்ணீரை வடிகட்டத் தொடஙகி முதல் முறையாக நீரை வெளியிடுவதற்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்.
2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் செயலிழந்த பின்னர் ஆலையில் உள்ள அசுத்தமான நீரை வெளியேற்றுவது அவசியம் என்று சொல்லும் ஜப்பான், இதேபோல் வடிகட்டப்பட்ட நீர் உலகெங்கிலும் உள்ள அணுமின் நிலையங்களிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
ஃபுகுஷிமா ஆலையில் ஏறக்குறைய 1.3 மில்லியன் டன் அசுத்தமான நீர் உள்ளது. இந்த அளவு நன்னீரைக் கொண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் சுமார் 500 நீச்சல் குளங்களை நிரப்பிவிடலாம். என்றால் நீரின் அளவை புரிந்துக் கொள்ளலாம்.
இந்த அளவிலான நீர் ஆலையில் பெரிய தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. இந்த நீரை சேமிக்க ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் யென் (912.66 மில்லியன் டாலர்) தொகை தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆலையில் அசுத்தமான நீரை சேமிக்கும் இடம் பற்றாக்குறையாகிவிட்டது.
Also Read | தமிழ் புத்தாண்டு: ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
"புகுஷிமா பகுதியை புனரமைக்க வேண்டியது அவசியம். அதற்கு புகுஷிமா டாய்-இச்சி அணுமின் நிலையத்தில் (Fukushima Dai-ichi Nuclear Power Plant) உள்ள அசுத்தமான நீரை அகற்றுவது தவிர்க்க முடியாத பணி..." என்று பிரதமர் யோஷிஹைட் சுகா (Prime Minister Yoshihide Suga) கூறுகிறார். அது மட்டுமல்ல, இப்போது திட்டமிட்டாலும், இந்த செயல்முறையை செய்து முடிக்க பல தசாப்தங்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஜப்பான் அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது கவலைகளை அதிகரிக்கிறது. ஏனென்றால், ஒலிம்பிக் போட்டிகளின் சில நிகழ்வுகள் சிதைந்த ஆலையில் இருந்து 60 கிமீ (35 மைல்) தொலைவில் நடைபெற உள்ளது.
2013 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பானுக்கு ஒப்புதல் அளித்தபோது ஜப்பானிய முன்னாள் மந்திரி ஷின்சோ அபே ஒரு உறுதிமொழியை அளித்திருந்தார். "புகுஷிமா (Fukushima) தொடர்பாக டோக்கியோவுக்கு ஒருபோதும் எந்த சேதமும் ஏற்படாது" என்ற அந்த உறுதிமொழியை தற்பொது ஜப்பானால் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
Also Read | 41 வயதில் கெய்ல் மிகப்பெரிய சாதனை, மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR