Nepal Earthquake: நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இது இந்திய நேரப்படி (IST) 06:35:16 மணிக்கு நிகழ்ந்தது. கடும் வீரியம் கொண்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. பூமியிலிருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நில நடுகத்தில் அதிர்வுகள் நேபாளத்தில் மட்டுமல்லாமல், டெல்லி-என்.சி.ஆர் மற்றும் பீகார் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் நிலம் நடுங்குவதை உணர்ந்து பாதுகாப்புக்காக வெளியில் விரைந்தனர். இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.



நிலநடுக்கத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக நேபாளம் மற்றும் இந்தியாவிலுள்ள அவசரகால மீட்புக் குழுக்கள் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளன. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் மக்கள் அமைதியாக இருக்குமாறும், பின்விளைவுகளுக்குத் தயாராக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க | Justin Trudeau | இந்தியாவுடன் மோதல்.. கிளப்பிய எதிர்ப்பு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!


மேலும் படிக்க | சீனாவில் வேகமாக பரவும் புதிய HMPV வைரஸ்.... அதிர்ச்சியில் உலக நாடுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ