அதிபர் டிரம்ப் கையை தட்டி விட்ட மனைவி மெலானியா - வீடியோ
அமெரிக்க அதிபர் டிரம்பின் கையை அவரது மனைவி தள்ளிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்புடன் சவுதி அரேபியாவிலிருந்து, விமானம் மூலம் இஸ்ரேல் சென்றார். விமான நிலையத்திலிருந்து அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது முன்னாள் சென்ற அதிபர் டிரம்ப் தனது மனைவியின் கையை பிடிக்க முயன்றார். ஆனால், அதிபரின் மனைவி மெலானியா, அவரின் கையை தட்டி விட்டார். அதன்பின் அதிபர் டிரம்ப் எதுவும் நடைபெறாததை போல் சாதாரணமாக நடந்து சென்றார்.
இந்நிலையில், இஸ்ரேல் பயணத்தை முடித்து கொண்டு அங்கிருந்து டிரம்ப் தனது மனைவி உடன் ரோம் நகர் சென்றார். ரோம் விமான நிலையத்திலும் டிரம்ப் கைபிடிக்க முயன்ற போது அதனை மெலானியா ஏற்க மறுத்துவிட்டார். விமானத்தில் இருந்து இறங்கிய போது டிரம்ப் கையை பிடிக்க முயன்ற போது அதனை அவர் ஏற்கவில்லை.
இது தொடர்பான வீடியோ காட்சி, டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது