முதலையை திருமணம் செய்த மேயர்... முகத்தில் முத்தம், விழாவில் நடனம் - இதெல்லாம் ஏன் தெரியுமா?
![முதலையை திருமணம் செய்த மேயர்... முகத்தில் முத்தம், விழாவில் நடனம் - இதெல்லாம் ஏன் தெரியுமா? முதலையை திருமணம் செய்த மேயர்... முகத்தில் முத்தம், விழாவில் நடனம் - இதெல்லாம் ஏன் தெரியுமா?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2023/07/02/301614-jul2004.png?itok=T3d0WIrj)
Mexico Crocodile Marriage: மழை, பயிர் முளைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதங்களை பெறும் வகையில், பெண் முதலையுடன் மெக்சிகோ மேயர் திருமணம் செய்துகொண்ட பாரம்பரிய நிகழ்வு நடந்துள்ளது.
Mexico Crocodile Marriage: தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா, நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படும் பாரம்பரிய விழாவில் பெண் முதலையை மணந்தார். உள்ளூர் கதைகளின்படி முதலை "இளவரசி" ஆக பார்க்கப்படுகிறது.
"நாங்கள் ஒருவரையொருவர் நேசிப்பதால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். அதுதான் முக்கியம். காதல் இல்லாமல் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இளவரசியுடன் நான் திருமணம் செய்துகொள்கிறேன்," என்று பாரம்பரிய சடங்கின் போது மேயர் சோசா கூறினார்.
230 ஆண்டுகள் நடைமுறை
சோண்டல் மற்றும் ஹுவே பழங்குடியினக் குழுக்களுக்கு இடையேயான அமைதியை நினைவுகூரும் வகையில் இந்த திருமண சடங்கு 230 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. மேயர், சோண்டல் மன்னராக உருவெடுத்து, முதலையை மணந்து, இரு கலாச்சாரங்களின் ஐக்கியத்தை அடையாளப்படுத்துகிறார்.
மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS
திருமண விழா சமூகங்களை இயற்கையுடன் இணைக்க அனுமதிக்கிறது. மழை, பயிர் முளைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெற திருணம் அனுமதிக்கிறது. "திருமணமானது பூமி தாயுடன் இரு தரப்பையும் இணைக்க அனுமதிக்கிறது. மழை, விதை முளைப்பு, சோண்டல் இன மக்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் என்று அனைத்தையும் கொடுக்கிறது," என வரலாற்றிசிரியரான ஜெய்ம் ஜராத்தே தெரிவிக்கிறார்.
முதலையுடன் நடனம்
விழாவுக்கு முன், மக்களின் வீடுகளுக்கு முதலையை நடனமாட அழைத்துச் செல்லப்படுகின்றன. முதலைக்கு விரிவான உடையை அணிவிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக அதன் மூக்கை மூடியிருப்பார்கள். திருமணம் நகர மண்டபத்தில் நடைபெறுகிறது, அங்கு ஒரு உள்ளூர் மீனவர் நல்ல மீன்பிடித்தல் மற்றும் செழிப்புக்கான நம்பிக்கையை விழாவில் வெளிப்படுத்துகிறார்.
மணமகளான முதலையுடன் அந்த மேயர் நடனமாடினார். மேலும் இந்த நிகழ்வு கலாச்சாரங்களின் ஒருங்கிணைவு கொண்டாடுகிறது, மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. முதலையின் முகத்தில் மேயர் முத்தம் இடுவதோடு விழா நிறைவடைகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ