கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS

Robotics And Terrorists: கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்று தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும் திறமையான தீவிரவாதிகள் தொடர்பாக, கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் தெரிய அவ்நதுல்ளது. வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2023, 03:12 PM IST
  • தீவிரவாதத்திற்கு வெளிநாட்டு நிதியுதவி
  • அதிர்ச்சி தரும் கிரிப்டோ கரன்சி பயன்பாடு
  • கிரிப்டோ கரன்சி மூலம் தொழில்நுட்பத்தை கற்கும் தீவிரவாதிகள்
கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS title=

கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்று தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும் திறமையான தீவிரவாதிகள் தொடர்பாக, கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை...  கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் தொழில்நுட்ப பின்னணியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய சதித் திட்டம் தொடர்பான வழக்கில் ஒன்பது பேர் மீது தேசிய புலனாய்வு முகமை தனது முதல் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

பயங்கரவாதக் குழுவான ISIS இன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திறன்களைப் பெறுவதற்காக ரோபோடிக்ஸ் படிப்பைத் தொடர வெளிநாட்டு நிதியுதவியை இவர்கள் பெற்றுள்ளனர். 

குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் தொழில்நுட்ப பின்னணியைக் கொண்டவர்கள், இவர்கள் தாக்குதல்களை நடத்துவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய ஐஎஸ்ஐஎஸ், ரோபோடிக்ஸ் படிப்பைத் தொடர நிதியுதவி செய்திருக்கிறது.

மேலும் படிக்க | முத்தலாக் முறைக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை! பொது சிவில் சட்டம் அவசியம்-பிரதமர்

குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாரிக் (25), மாஸ் முனீர் அகமது (23), சையத் யாசின் (22), ரீஷான் தாஜுதீன் ஷேக் (22), ஹுசைர் ஃபர்ஹான் பெய்க் (22), மஸின் அப்துல் ரஹ்மான் (22), நதீம் அகமது கே ஏ (22), ஜபியுல்லா (32), நதீம் பைசல் என் (27) ஆகியோர் மீது வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அவர்கள் அனைவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகமது மற்றும் சையத் யாசின் ஆகியோர் மீது இந்த ஆண்டு மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. அவர்கள் மீது இப்போது வேறு குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளதாக என்ஐஏ கூறியது. இவர்கள், ரீஷான் தாஜுதீன் ஷேக், மசின் அப்துல் ரஹ்மான் மற்றும் நதீம் அகமது கே.ஏ ஆகியோருடன் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொது சிவில் சட்டம் இந்திய தத்துவத்திற்கு எதிரானது: மேகாலயா முதல்வர்

ஷாரிக், முனீர் மற்றும் யாசின் ஆகியோர், இஸ்லாமிய அரசு எனப்படும் பயங்கரவாதக் குழுவின் வழிகாட்டுதலின் பேரில், அப்பகுதியில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவிக்க வெளிநாட்டில் உள்ள ஐஎஸ் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மூவரும் தீவிரவாதிகளை இணைத்து, பணியில் சேர்த்துள்ளனர் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கிரிப்டோகரன்ஸிகள் மூலம் ஆன்லைன் மூலமாக பணம் கிடைத்துள்ளது.  

இந்த வழக்கை முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி சிவமொக்கா ரூரல் போலீஸார் பதிவு செய்திருந்தனர், பின்னர் இந்த வழக்கு, நவம்பர் 15ஆம் தேதி என்ஐஏவிடம் சென்றது.

மேலும் படிக்க | டீஸ்டா செடல்வாட்டுக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியது SC: பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News