துல்திபெக்: மெக்ஸிகோ பட்டாசு சந்தையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி சுமார் 29 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெக்ஸிக்கோவில் உள்ள துல்திபெக் என்ற இடத்தில் பட்டாசு சந்தை உள்ளது. மெக்ஸிகோவிலிருந்து 32 கி.மீ., தொலைவில் அமைந்த பட்டாசு சந்தையில் திடீரென வெடி விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. இவ்வெடி விபத்தில் சிக்கி சுமார் 29 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் விரைந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, அப்பகுதி சாலை வழியை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பினா நெய்டோ தனது ஆழ்ந்த இரங்கலை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.