கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 239 பேரை ஏற்றியிருந்த அந்த Boeing 777 ரக விமானம் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் காணாமல் போனது. அந்த விமானத்தைத் தேடும் பணிகள் மிகத் தீவிரமாகவும் விரிவாகவும் மேற்கொள்ளப்பட்டன. விமானம் இருக்கும் இடம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர், அவர்களது ஆதரவாளர்கள் எனச் சுமார் 500 பேர் இன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பேரங்காடி முன்னால் திரண்டு விமானத்தைத் தேடச் சொல்லி மீண்டும் குரல்கொடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | CPPCC NPC: பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டம்!


அவர்களில் சிலர் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் விமானம் சுமார் 3 ஆண்டுகளாகத் தேடப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் 120,000 சதுர கிலோமீட்டர் அளவுக்குத் தேடியும் விமானத்தைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியக் குழு தலைமையேற்றிருந்த அந்தத் தேடல் பணிகள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தனிப்பட்ட முறையில் MH370 விமானத்தைத் தேடும் முயற்சியில் இறங்கியது.


பல மாதங்களுக்குப் பிறகு எந்தப் பலனும் இல்லாததால் அந்த முயற்சியை நிறுவனம் கைவிட்டது. இந்நிலையில், காணாமல் போன எம்எச்370 மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை மீண்டும் தேட தயாராக இருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதுகுறித்துப் புதிய ஆதாரம் கிடைத்தால், தேடும் பணியை மீண்டும் தொடங்க தயார் என அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் மார்ச் 4  ஆம் தேதி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி காணாமல் போன விமானத்தில் 239 பேர் இருந்தனர். இதுவரை அந்த விமானம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.


பல்வேறு நாட்டு நிபுணர்கள் பல்வேறு வகையிலான ஆய்வுகள் மற்றும் கருத்துருக்களின் அடிப்படையில்  பரந்துபட்ட தேடுதல் பணி செய்யப்பட்டது. ஆனால் அந்த விமானம் ஆழ்கடல் பகுதியில் விழுந்ததால் எந்த திசையில் எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்ற தகவல் சேகரிக்கப்பட முடியவில்லை. எவ்வளவோ தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்தியும் MH370 விமானத்தின் தகவலை பெற முடியவில்லை.


மேலும் படிக்க | அபுதாபி இந்து கோயில்... ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ