மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராக நியமனம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் (Melinda Gates) இடையே விவாகரத்து தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் (Melinda Gates) இடையே விவாகரத்து தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரு முக்கிய நிகழ்வாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் (Microsoft) புதன்கிழமை அன்று, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராக இருந்த ஜான் தாம்சனுக்கு பதிலாக தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவை அதன் புதிய தலைவராக நியமித்தது.
ஸ்டீவ் பால்மரை அடுத்து 2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற நாடெல்லா ( Satya Nadella), லிங்க்ட்இன் (LinkedIn), நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (Nuance Communications) மற்றும் ஜெனிமேக்ஸ் ( ZeniMax) போன்ற பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனகங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட நிறுவனத்தில் வணிகத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
ALSO READ | பில் கேட்ஸ்- மெலிண்டா இடையிலான பிளவிற்கு காரணம் ’Jeffrey Epstein’ என்பது உண்மையா
உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் கேட்ஸ் (Bill Gates) மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நலப்பணிகளில் கவனம் செலுத்துவதாகக் கூறி, பில் கேட்ஸ் குழுவிலிருந்து விலகிய ஒரு வருட காலத்திற்குப் பிறகு, உயர்மட்ட அளவில் நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ஸ் ஒரு ஊழியருடன் காதல் தொடர்பு வைத்திருந்தது குறித்து ஒரு விசாரணையை நடத்தியதாக நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது.
மேலும் பாலியல் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஜஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein), பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எப்ஸ்டீன், இந்த வழக்கு தொடர்பான உயர் மட்ட விசாரணை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பில் கேட்ஸ் (Bill Gates), நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என இயக்குநர்கள் குழு முடிவு செய்ததா என்பது குறித்து எதுவும் கூற மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR