ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் வெளியிட்டின் படி அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனரை முந்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் பணக்கார நபர்களின் பட்டியல், உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல், உலகின் பணக்கார குடும்பங்கள்  இதுபோன்ற பட்டியல்களை ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் வெளியிட்டு வருகிறது. 


இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 53 வயதான அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்  உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.  இவருக்கு அமேசான் நிறுவனத்தில் 17 சதவீதம் பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். மேலும் இவர் வாஷிங்டன் போஸ்ட் செய்திதாள் மற்றும் தனியார் விண்வெளி நிறுவனம் புளு ஆர்ஜின் ஆகியவற்றின் உரிமையாளராகவும் உள்ளார். 


இவருடைய சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் என மதிப்பிடபட்டுள்ளது. இவருக்கு அடுத்த இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனதின் பில்கேட்ஸ் உள்ளார். இவருடய சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் என மதிப்பிடபட்டுள்ளது



கடந்த மார்ச் மாதம் ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் வெளியிட்ட பட்டியலில் பில்கேட்ஸ் தான்  உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.