அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் காப்பகம் மூடப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். 


அந்த வகையில் மெக்சிகோ எல்லை வழியாக வரும் அகதிகளைச் சட்டவிரோத குடியேற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து டெக்சாசில் உள்ள டோர்னில்லோ காப்பகத்தில் தங்க வைக்க கடந்த ஆண்டு திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டத்ததின் கீழ் கிட்டத்தட்ட 6,200 குழந்தைகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.


அமெரிக்க சட்டப்படி சட்டவிரோத குடியேற்றத்தில் குழந்தைகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதால், குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகத்தில் தங்க அடைக்கப்பட்டனர். ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து குழந்தைகளை காப்பகத்தில் தங்க வைக்கும் திட்டத்தினை ட்ரம்ப் ரத்து செய்தார்.


இதனைத்தொடர்ந்து காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. படிப்படியாக குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் இருக்கும் முகாம்களில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த பணி தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளதால், டோர்னில்லோ காப்பகத்தில் இருந்து கடைசி குழந்தையும் பெற்றோரிடன் அனுப்பு வைக்கப்பட்டது. 


காப்பகம் மூடப்பட்டாலும், பெற்றோர், பாதுகாவலர்கள் இன்றி அகதிகளாக வரும் குழந்தைகளுக்கு இந்த காப்பக அமைப்பு பயன்படும் என்பதால் இக்காப்பகங்கள் பராமறிக்கப்படும் என குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான சுகாதார மற்றும் மனித சேவைகள் நிர்வாகத்தின் துணை செயலாளர் லின் ஜான்சன் தெரிவித்துள்ளார்.