ரஷ்யாவுடன் மேலும் நெருங்கும் சீனா! ராணுவ ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும்
ரஷ்ய இராணுவத்துடன் நெருங்கிய தகவல் தொடர்பு கொள்ள தயாராக இருக்கும் சீனா! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு. ரஷ்ய இராணுவத்துடன் நெருங்கிய தகவல் தொடர்பு கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். மேலும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை புடின் வரவேற்றதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) மாஸ்கோவில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக, இரு நாடுகளின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கள் இராணுவங்களுக்கு இடையே நெருக்கமான மூலோபாய தகவல்தொடர்புகளைப் பெற ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சர் கூறினார். ரஷ்யாவுடன் பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை சீனா தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.
"உலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் புதிய பங்களிப்புகளை செய்ய ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது" என்று லி கூறியதாக அரச ஊடக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | தலையணை உறைக்குள் இருந்த மலைப்பாம்பு... பெண்ணுக்கு நேர்ந்த பகீர் அனுபவம்!
சீனாவும் ரஷ்யாவும் மிகவும் "வலுவான உறவுகளை" கொண்டிருப்பதாகவும், பனிப்போர் காலத்தின் இராணுவ-அரசியல் கூட்டணிகளை நாடுகள் மிஞ்சிவிட்டதாகவும், அவை மிகவும் நிலையானவை என்றும் பெய்ஜிங் கருதுவதாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
ரஷ்யா-சீனா உறவுகள் "ஏற்கனவே ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளன" என்று குறிப்பிட்ட லீ, சீனாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற பிறகு மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது.
"எங்கள் இருதரப்பு உறவுகளின் சிறப்பு தன்மை மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக நான் குறிப்பாக ரஷ்யாவை தேர்வு செய்தேன்" என்று லி தெரிவித்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது..
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பின் போது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை புடின் வரவேற்றதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
"ரஷ்யா மற்றும் சீனா, இராணுவங்களின் மூலமாகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம், பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து பரிமாறி வருகிறோம், இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புத் துறையில் ஒத்துழைக்கிறோம், கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கிறோம்" என்று புடின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையில் மூண்ட போர்! 25 பேர் பலி!
"இது, சந்தேகத்திற்கு இடமின்றி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் பிரத்தியேக நம்பிக்கையான, மூலோபாயத் தன்மையை வலுப்படுத்தும் மற்றொரு முக்கியமான பகுதி" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேலும் கூறினார்.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அரசுமுறைப் பயணம், கடந்த மாதம் ரஷியாவிற்கு ஷியின் அரசுமுறைப் பயணத்தின் பின்னணியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த பயணத்தின்போது, பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில், இரு நாடுகளும் ஒன்றாகச் செயல்பட ஒப்புக்கொண்டன.
கடந்த சில ஆண்டுகளில், மாஸ்கோவும் பெய்ஜிங்கும், தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன, இவை இரண்டும் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பின்னணியில் உருவானது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைனில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, சீனாவுடன் ரஷ்யாவின் நெருக்கம் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | சருமத்தின் கீழ் நெளிந்த புழுக்களை கண்டு அதிர்ந்த பெண்! பச்சை ரத்த உணவினால் வந்த பாதிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ