3 கைகளுடன் ஒரு சிறுவன் நேபாளத்தில் பிறந்துள்ளான். 3-வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாவது கையை ஆபரேசன் மூலம் அகற்றுவது மிகவும் ஆபத்தானது. அதை அகற்றுவதன் மூலம் சிறுவனின் தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் பக்கவாதம் நோய் உருவாக பெருமளவில் வாய்ப்பு உள்ளது. எனவே அதை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான், தூங்கும் போது அந்த பயன் மிகவும் சிரமப்படுகிறான். அவனது 3-வது கை முதுகு தண்டு வடத்தில் இருந்து உருவாகியுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் இது போன்ற விபரீதங்கள் குழந்தைக்கு அரிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


நேபாள மக்கள் மத நம்பிக்கையில் மிகவும் ஈடுபாட்டு கொண்டுள்ளனர். கர்ப்பகாலத்தில் மருத்துவ சிகிச்சை, ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள அவர்களது மதகுருமார்கள் அனுமதிப்பதில்லை. அது போன்ற காரணங்களால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.