பிரபல மொபைல் சேட்டிங் செயலியால் மலர்ந்த காதலில், 19-வயது சிறுவனுடம் 15-வயது சிறுமி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாங்காக் நகரை சேரந்தவர் கம்பிபாட்(15). இரண்டு வாரங்களுக்கு முன்னர் பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடத்தினை நண்பர் வீட்டில் சென்று முடிக்கவுள்ளதாக தெரிவித்து வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.


இதனையடுத்து இவரது பெற்றோர்கள் காவல்துறையின் உதவியை நாடினர். கம்பாபாட் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.


இரண்டு வார தேடுதலுக்கு பின்னர் கம்பிபாட், லால் பராவோ நகரில் வசித்து வரும் கரோகட்(17) என்பவருடன் ரகசியமாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர்களிடன் இருந்து மைனர் பெண்ணை கடத்தி வைத்திருந்ததாக கரோகட் மீது வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.


விசாரணையில் கரோகட் - கம்பிபாட் இருவருக்கும் இரண்டு வராங்களுக்கு முன்னர் பிரபல சேட்டிங் செயலியின் மூலம் அறிமுகம் ஏற்பட்டதாக தெரிகிறது.


மீட்கப்பட்ட கம்பிபாட் அவரது பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் தங்களது குழந்தைகளுக்கு மொபைல் போன்ற செயலிகளை வாங்கி தருவது அவர்களது பாதுகாப்பு கருத்தியலுக்காக இருக்க வேண்டுமே தவிர, பாதகமான விஷயங்களை விலைவிக்க கூடியதாக இருக்க கூடாது என குறிப்பிட்டுள்ள காவல்துறை, தங்கள் குழந்தையின் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.