மாட்ரிட்: கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை பாடாய் படுத்தியது. உலகம் முழுவதும் நிலைமை சற்று சீராகி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வேளையில் மங்கி பாக்ஸ் என்ற புதிய தொற்று உலக நாடுகளை பற்றிக்கொண்டுள்ளது. தற்போது மங்கி பான்ஸ் நோயால் ஏற்பட்ட மரணம் பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஸ்பெயின் தனது நாட்டில் குரங்கு அம்மை நோயால் முதல் இறப்பு ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஸ்பெய்னில் ஏற்பட்ட மரணம், குரங்கு அம்மையால்  ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள முதல் மரணமாகும். தற்போதைய அலையில் பரவலில் இது ஆப்பிரிக்காவிற்கு வெளியே ஏற்பட்ட இரண்டாவது மரணம் என்று கருதப்படுகிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை காலை, தற்போதைய அலையில் ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்பட்ட முதல் மரணம் குறித்து பிரேசில் அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 22 முதல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலகளவில் ஐந்து இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன.


கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பு, வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது. இது உலக சுகாதார அமைப்பின் மிக உயர்ந்த நிலை எச்சரிக்கையாகும்.


மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள் என்ன? சிகிச்சை உள்ளதா? எப்படி பாதுகாப்பாக இருப்பது?


அதன் சமீபத்திய அறிக்கையில், ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம் நாட்டில் 4,298 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியது. 3,750 நோயாளிகளில், 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளி எண்ணிக்கையில் 3.2 சதவிகிதமாகும். ஒருவர் இறந்துள்ளார். 


வேறு எந்த விவரத்தையும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கவில்லை. இறந்த நபர் குறித்த கூடுதல் விவரங்களை தெரிவிக்க சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.


குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து பரவும் ஒரு தொற்று நோயாகும். ஒரு நபர் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது மனிதருடன் தொடர்பு கொள்ளும்போது, ​​​​அவருக்கு எளிதில் இந்த நோய் பரவுகிறது. குரங்கு, எலி, அணில் போன்ற விலங்குகளால் இந்நோய் பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபரின் படுக்கை, காயங்கள், உடல் திரவங்கள் மற்றும் வாயில் உள்ள நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது.


குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள்:


- காய்ச்சல்
- தலைவலி
- தசை வலி
- முதுகு வலி
- உடலில் குளிர்ச்சி
- சோர்வு
- வீங்கிய நிணநீர் கணுக்கள்


மேலும் படிக்க | Monkeypox: குழந்தைகளில் காணப்படும் அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ