இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு நல்ல செய்தி: H-1B விசா குறித்த முக்கிய அறிவிப்பு

அமெரிக்கா இரண்டாவது முறையாக விசாவுக்கான லாட்டரி செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதனை அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழில்துறை நிபுணர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. H-1B விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் சிலரைத் தேர்ந்தெடுப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்காக, அமெரிக்கா (America) இரண்டாவது முறையாக லாட்டரி செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதனை அறிவித்துள்ளது. முதல் லாட்டரியில் இந்த விசா பெற முடியாத நூற்றுக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இது மற்றொரு வாய்ப்பை வழங்கும்.
இந்த விசாவிற்கான (Visa) அதிக தேவை இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசா அமெரிக்க நிறுவனங்கள், சிறப்பு தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.
ALSO READ: அமெரிக்காவில் தீயாய் பரவும் கொரோனா; 4ஆம் அலை தொடங்கி விட்டதா..
ஆகஸ்ட் 2 முதல் செயல்முறை தொடங்கும்
யுஎஸ்சிஐஎஸ், '2022 ஆம் நிதியாண்டில் போதுமான எண்ணிக்கையை அடைய இன்னும் சில பதிவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் சமீபத்தில் முடிவு செய்தோம். இதற்காக ஏற்கனவே ஜூலை 28 அன்று சமர்ப்பிக்கப்பட்ட சில பதிவுகளை தோராயமாக தேர்ந்தெடுத்துள்ளோம். இப்போது இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில், மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 2 முதல் நவம்பர் 3 வரை நேரம் அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளைக் கொண்ட தனிநபர்கள் தேர்வு அறிவிப்பில் சேர்க்கப்பட அவர்களது myUSCIS கணக்குகள் புதுப்பிக்கப்படும். இதனுடன், பிற தகவல்களும் அதில் சேர்க்கப்படும்." என்று கூறியுள்ளது.
ஆன்லைன் தாக்கல் எதுவும் இருக்காது
HC-1B கேப்-சப்ஜெக்ட் மனுக்களை சரியான சேவை மையத்தில் சரியான காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று USCIS உத்தரவிட்டுள்ளது. இதனுடன், HC-1B மனுவிற்கான ஆன்லைன் தாக்கல் இல்லை என்று USCIS கூறியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் மனுவுடன் பதிவுத் தேர்வு அறிவிப்பின் அச்சிடப்பட்ட நகலையும் இணைக்க வேண்டும்.
யுஎஸ்சிஐஎஸ் மேலும், "தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு, விண்ணப்பதாரர்கள் எச் -1 பி கேப்-சப்ஜெக்ட் மனுவை தாக்கல் செய்யலாம் என்பதை மட்டுமே குறிப்பிடுகிறது, அவர்களது மனு அங்கீகரிக்கப்படும் என்று குறிப்பிடவில்லை." என்றும் கூறியுள்ளது.
ALSO READ: Delta variant: சிக்கலில் அமெரிக்க பொருளாதாரம், அதிருப்தியை சந்திக்கும் ஜோ பைடன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR