இந்திய ஐடி ஊழியர்களுக்கு சிங்கப்பூர் விசா மறுப்பா?
இந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா வழங்க சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
சிங்கப்பூரில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களில் பணிபுரிய வரும் ஊழியர்களுக்கு அந்நாட்டு அரசு விசா வழங்க மறுத்துள்ளது.
இந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா வழங்குவதை 2016-ம் ஆண்டின் துவக்கம் முதலே சிங்கப்பூர் அரசு படிப்படியாக குறைத்து வருகிறது.
இதனால் இந்திய ஐடி நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்ளுமாறு சிங்கப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எச்சிஎல், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் சிங்கப்பூரில் இருந்து , வேறு நாடுகளுக்கு சென்று விட்டன. இன்போசிஸ், விப்ரோ, எல் அண்டு டி, இன்போடெக் உள்ளிட்ட நிறுவனங்களும் வேறு நாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளன.