மாஸ்கோ: ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் எவ்ஜெனி ஃபெடோரோவ், மே 1 வரை நாட்டின் சந்தைக்குத் திரும்பாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 ஆண்டு தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஒரு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைவர் மாக்சிம் ரெஷெட்னிகோவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் குறித்து RT செய்தி வெளியிட்டுள்ளது. 


பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யா-வில் தங்கள் பணிகளையும், ரஷ்யர்களுக்கான சேவைகளையும் முதலீடுகளையும்  வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அவர் கூறினார். 


அவரைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான குடிமக்களை அவர்களது எதிர்காலம், வேலை வாய்ப்புகள் மற்றும் நல்வாழ்வைப் பற்றிய நிச்சயமற்ற நிலையில் ஆழ்த்தியுள்ளன.


"இந்த நிறுவனங்கள் திரும்புவதற்கான நிபந்தனைகளை நிர்ணயிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மே 1, 2022 வரை அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை உடனடியாக மீட்டெடுக்க அனுமதிக்கவும். அல்லது, முன்மொழியப்பட்ட தேதிக்கு முன்னர் ரஷ்யாவில் பணியை மீட்டெடுக்க விரும்பாத நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும். " என்று மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது: இந்தியா 


முன்னதாக, ரஷ்யாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வெளிப்புற நிர்வாகத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் யோசனையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரித்தார். அவரைப் பொறுத்தவரை, அதிகாரிகளிடம் இதற்கு சாதகமாக, போதுமான சட்ட அம்சங்கள் உள்ளன. 



வணிகத்தை நேரடியாக தேசியமயமாக்குவதை விட வெளிநாட்டு நிறுவனங்களில் தற்காலிக நிர்வாகத்தை நியமிப்பது மிகவும் சரியான மற்றும் சமரசத்திற்கு வழிவகுக்கும் வகையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்